போரால் 45 மில்லியன் பேர் பட்டினியால் அவதிப்படலாம்
(கோப்புப் படம்: REUTERS/Hatem Khaled)
This audio is generated by an AI tool.
மத்திய கிழக்குப் போர் ஜூன் மாதத்திற்குப் பின்னரும் நீடித்தால் மேலும் 45 மில்லியன் பேர் பட்டினியை எதிர்நோக்க நேரிடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டும் என்று அது சொன்னது.
சண்டை மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது.
அதன் விளைவாக உணவு, எரிபொருள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்திருக்கின்றன.
அந்தத் தாக்கம் வட்டாரத்திற்கு வெளியே வசிப்பவர்களாலும் உணரப்படலாம்; குடும்பங்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்க முடியாமல் போகலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உலக உணவுத் திட்டம் தெரிவித்தது.