ஆசியான் உச்சநிலை மாநாடு - இன்று தொடங்குகிறது
தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள், பிலிப்பீன்ஸில் கூடுகின்றனர்.
48ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு இன்று செபுவில் தொடங்குகிறது.
மத்திய கிழக்குப் போருக்கு இடையே உச்சநிலை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 உறுப்புநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முதலில் ஆலோசனை நடத்துவர்.
போர், அதன் பொருளாதாரத் தாக்கம் ஆகியன முக்கியமாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள ஆசியான் குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவையும் அதில் அடங்கும்.
ஹோர்முஸ் நீரிணை தடையால் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், சில நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் குறைக்கப்பட்டுள்ளன.