Skip to main content
மத்திய கிழக்கில் அமைதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்கில் அமைதி - நிச்சயம் சாத்தியம்: டிரம்ப்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா போர் முடிவுக்கு வருவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

நேற்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் ஈராண்டு நிறைவை இஸ்ரேல் அனுசரித்தது. அப்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, ஹமாஸைத் துடைத்தொழிக்கப்போவதாக உறுதி கூறினார்.

எகிப்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

அதிபர் டிரம்ப் பரிந்துரைத்த 20 அம்சத் திட்டம் குறித்துப் பேசப்படுகிறது.

மத்தியக்கிழக்கில் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் திரு டிரம்ப் கூறியிருக்கிறார்.

ஹமாஸ் குழுவில் முக்கியமாகப் பேச்சு நடத்துபவர் கலில் அல்-ஹய்யா (Khalil al-Hayya).

போர் நிறுத்தத்துக்குத் திரு டிரம்ப்பும் ஆதரவு அளிக்கும் மற்ற நாடுகளும் உறுதி கூற வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்