மத்திய கிழக்கில் தொடரும் தாக்குதல்கள்
(படம்: Ilia YEFIMOVICH / AFP)
This audio is generated by an AI tool.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீதான தாக்குதல்களைத் தொடர்கின்றன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலும் மற்ற பகுதிகளிலும் பெரும் வெடிப்புகள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஈரான் பின்வாங்கப் போவதில்லை என்று உறுதி கூறியிருக்கிறது.
அது மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதிலடி தாக்குதல்களை நடத்துகிறது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகள் ஈரான் பாய்ச்சிய ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் இடைமறித்திருப்பதாகத் தெரிவித்தன.
இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கு அருகே ஈரான் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
குடியிருப்புக் கட்டடம் தாக்கப்பட்டதாகக் காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இஸ்ரேலின் பல பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்துகிறது.