செங்கல்லுடன் கட்டிவைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்
Jeonnam Migrant Workers Human Rights Network
This audio is generated by an AI tool.
வெளிநாட்டு ஊழியர் ஒருவர் செங்கல்லுடன் சேர்த்துக் கட்டிவைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று தென்கொரியாவில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது.
செங்கல்லுடன் கட்டிவைக்கப்பட்ட ஆடவர் பாரந்தூக்கியில் உயர்த்தப்படுவதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
அதில் சிரிப்புச் சத்தமும் கேட்கிறது.
"நீங்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்," என்று ஒருவர் கூறுகிறார்.
வெளிநாட்டு ஊழியரின் நலனைக் காக்கும் ஆர்வலர் குழு ஒன்று சமூக ஊடகத்தில் காணொளியை வெளியிட்டது.
சௌத் ஜுல்லா (South Jeolla) மாநிலத்தில் இருக்கும் ஒரு செங்கல் சூளையில் இம்மாதத் தொடக்கத்தில் சம்பவம் நடந்ததாக அது சொன்னது.
செங்கல்லுடன் கட்டிவைக்கப்பட்ட இலங்கை ஆடவர் தற்போது மனநலச் சிகிச்சை பெறுவதாகக் குழு கூறியது.
காணொளி பின்னர் அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது.
சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடப்பது சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்று தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae-myung) கூறினார்.
முழு விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.