அமெரிக்க முன்னாள் துணை அதிபரின் இல்லத்தில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

Ryan M. Kelly / AFP
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸின் (Mike Pence) இண்டியானா (Indiana) இல்லத்தில் இன்னும் கூடுதலான ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திரு. பென்ஸின் வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடமும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடமும் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய ஆவணங்களைச் சிறப்பு வழக்கறிஞர்கள் விசாரிக்கின்றனர்.
அதிபர் தவணைக்காலம் முடிவுற்றதும் அனைத்து வெள்ளை மாளிகை ஆவணங்களும் தேசிய ஆவணக்-காப்பகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
திரு. டிரம்ப்பின் தவணைக்காலம் முடிந்ததும் சில குறிப்பிட்ட ரகசிய ஆவணங்கள் திரு. பென்ஸின் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புளோரிடா (Florida) மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள திரு. டிரம்ப்பின் Mar-a-Lago இல்லத்தை மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதைத் தொடர்ந்து அங்கு நூற்றுக் கணக்கான ரகசிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆவணங்களை முதலில் திரும்பக் கொடுக்க மறுத்த திரு. டிரம்ப், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார்.