Skip to main content
ஜொகூரில் மிதமான நிலநடுக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் மிதமான நிலநடுக்கம் - பக்கத்து மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன

வாசிப்புநேரம் -
 ஜொகூரில் மிதமான நிலநடுக்கம் - பக்கத்து மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன

படம்: Facebook/Malaysian Meteorological Department

வெளியீடு : 24 Aug 2025 09:15AM புதுப்பிப்பு : 24 Aug 2025 12:50PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் 4.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

நிலநடுக்கம் காலை 6.13 மணிக்கு செகாமாட் (Segamat) மாவட்டத்தில் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வகம் அறிக்கையில் கூறியது.

அதன் அதிர்வுகள் நெகிரி செம்பிலான், மலாக்கா, பஹாங் ஆகிய பக்கத்து மாநிலங்களிலும் உணரப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.
எனினும் செகமாட்டில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை ஜொகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹாஃபிஸ் காஸி (Onn Hafiz Ghazi) உறுதிப்படுத்தினார்.

நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அவர் தமது Facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து விலகியிருங்கள். அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்" என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்