பிரான்ஸில் 5.9 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள நகைகள் திருட்டு
வாசிப்புநேரம் -
படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரான்ஸில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் மில்லியன் யூரோவுக்கு மேல் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
லாலிக் (Lalique) எனப்படும் விலையுயர்ந்தக் கண்ணாடி நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் சுமார் 20 நகைகள் திருடப்பட்டன.
முகமூடி அணிந்த கும்பல் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் புகுந்து ஆறு கண்ணாடிப் பெட்டிகளை உடைத்து நகைகளைச் சூறையாடியது.
திருடிச் செல்லப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 4 மில்லியன் யூரோ (5.91 மில்லியன் வெள்ளி).
முதலில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஒரு துப்புரவாளர் காவல்துறையைத் தொடர்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு அருங்காட்சியகம் மூடி வைக்கப்படும்.
கண்காணிப்புக் கேமராப் படங்கள் ஆராயப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன், பிரான்சின் லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.

ஆதாரம் : AFP