80 ஆண்டுகளுக்கு விற்கப்பட்ட பானம் இனி இல்லை...
This audio is generated by an AI tool.
Coca-Cola நிறுவனம் அதன் Minute Maid உறைந்த பான விற்பனையை 80 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தவுள்ளது.
1946ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் அது உறைந்த பழச்சாற்றைக் கலன்களில் விநியோகம் செய்தது.
தற்போது வாடிக்கையாளர்கள் புதிதாகப் பிழியப்பட்ட பழச்சாற்றை விரும்புகின்றனர்.
அதனால் அமெரிக்கா, கனடா ஆகியவற்றில் உறைந்த பழச்சாற்றின் விற்பனை நிறுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.
அது ஏப்ரல் மாதம் முதல் நடப்புக்கு வரும்.
ஆரஞ்சு, எலுமிச்சைப்பழச்சாறு ஆகியவற்றை Minute Maid தயாரித்துக்கொண்டிருந்தது.
பல தலைமுறைகளாகப் பிழியாமல் உடனடியாக ஆரஞ்சுப் பழச்சாற்றை அருந்த விரும்பிய அமெரிக்கர்கள் Minute Maid கலன்களை உடைத்து ஊற்றிக் குடித்து வந்தனர்.
1946ஆம் ஆண்டில் Vacuum Foods Corp எனும் நிறுவனம் உறைந்த ஆரஞ்சுப் பழச்சாற்றை நாடெங்கும் விநியோகம் செய்த முதல் அமெரிக்க நிறுவனமாகும்.
Coca-Cola நிறுவனம் அதனைத் தெரிவித்தது.
பிறகு அது தன்னுடைய பொருள்களுக்கு Minute Maid என்று பெயர் வைத்தது.
நிறுவனமும் Minute Maid என்று பெயரை மாற்றிக்கொண்டது.