Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆகாயத்தில் பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை

வாசிப்புநேரம் -
ஆகாயத்தில் பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை

(படம்: Twitter/AishaKhatib)

கனடாவின் டொரோன்ட்டோ (Toronto) பல்கழைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிபவர் டாக்டர் ஆயிஷா கத்தீப் (Aisha Khatib). 

டோஹாவிலிருந்து (Doha) என்ட்டெபேக்குச் (Entebbe) செல்லும் விமானத்தில் கடந்த மாதம் (டிசம்பர் 2021) 5ஆம் தேதி பயணம் மேற்கொண்டார் அவர்.  

முதல் குழந்தையைப் பெற்றெடுக்கவிருந்த உகாண்டாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவரும் அவருடன் அதே விமானத்தில் பயணம் செய்தார். 

விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவர் ஒருவர் தேவை என்ற அறிவிக்கப்பட்டது.

டாக்டர் கத்தீப் உதவி செய்யச் சென்றபோது, நோயாளியைச் சுற்றி சிலர் கூடியிருந்தனர். 

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதோ என்று நினைத்த டாக்டர் கத்தீப், நோயாளிக்கு அருகே சென்றபோது அவர் பிரசவ வலியில் துடித்ததைக் கண்டார்.  

விமானத்தில் இருந்த ஒரு தாதியும் குழந்தை மருத்துவர் ஒருவரும் அவருக்கு உதவினர். 

ஆரோக்கியமாகப் பிறந்த பெண் குழந்தைக்கு டாக்டர் ஆயிஷா கத்தீபுக்கு நன்றிகூறும் விதமாக 'மிராக்கெல் ஆயிஷா' (Miracle Aisha) என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa