Skip to main content
பெரும் சர்ச்சைக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப்போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பெரும் சர்ச்சைக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப்போட்டி- மெக்சிகோ அழகி வென்றார்

வாசிப்புநேரம் -
பெரும் சர்ச்சைக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப்போட்டி- மெக்சிகோ அழகி வென்றார்
படம்: AP/Sakchai Lalit
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தாய்லந்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டியில் மெக்சிகோ அழகி ஃபாத்திமா போஷ் (Fatima Bosch) வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 120 அழகிகள் கலந்துகொண்டனர்.

சில வாரங்களுக்கு முன்னர் போஷை போட்டியின் ஏற்பாட்டுக் குழு இயக்குநர் நவாட் இட்சாராகிரிசில் (Nawat Itsaragrisil) "முட்டாள்" எனக் கூறி அவமதித்தார்.

போஷ் தமது சமூக ஊடகப் பக்கத்தில் விளம்பரப்படுத்தும் பதிவுகளைச் செய்யவில்லை என்று கூறி நவாட் கடுமையாகச் சாடினார்.

நவாட்டின் நடத்தையைக் கண்டித்து போஷ் அறையிலிருந்து வெளியேறினார். அவருக்கு ஆதரவாக மற்ற அழகிகளும் வெளியேறினர்.

செய்தியாளர்களிடம் பேசிய போஷ், உலகம் இதைப் பார்க்கவேண்டும்; நாங்கள் குரல் கொடுக்கக் கொடுக்கப்பட்டுள்ள தளம் இது என்றார்.

அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நவாட் பின்னர் மன்னிப்புக் கேட்டார்.

அவமரியாதையைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம் என்றார் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum).

சர்ச்சையைத் தாண்டி மெக்சிகோ அழகி போட்டியில் வெற்றி பெற்றார்.

போட்டியில் மற்ற அசம்பாவிதங்களும் நடந்தன.

இரண்டு நடுவர்கள் விலகினர். போட்டியில் ரகசியமாக அங்கீகரிக்கப்படாத வாக்கெடுப்பு நடக்கிறது என்று இருவரில் ஒருவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் பிரிட்டன், ஜமைக்கா ஆகிய நாடுகளின் அழகிகள் போட்டியின்போது கீழே விழுந்தனர். ஜமைக்கா அழகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்