வெளிநாட்டுப் பொருள்கள் வேண்டாம்; உள்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவோம்! - இந்தியப் பிரதமர்
REUTERS/Issei Kato/File Photo
This audio is generated by an AI tool.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தும்படி மக்களிடம் கோரியுள்ளார்.
அதற்கு ஏற்றவாறு வர்த்தகர்கள் உள்நாட்டுப் பொருள்களை விற்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க அது முக்கியம் என்றார் திரு மோடி.
அமெரிக்காவுடனான உறவில் தொய்வு ஏற்பட்டுள்ள வேளையில் தொலைக்காட்சியில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியாவில் வரிக் குறைப்பு பற்றி நாளை (22 செப்டம்பர்) அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் திரு மோடியின் கருத்துகள் வந்துள்ளன.
இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் 50 விழுக்காட்டு வரி விதித்தார்.
அது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
McDonald's, Pepsi போன்ற அமெரிக்கத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.