Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குரங்கம்மை - பெயரால் ஏற்படும் தவறான ஊகங்கள் - புதிய பெயர் வைப்பது குறித்து யோசனை

வாசிப்புநேரம் -

உலகச் சுகாதார நிறுவனம் குரங்கம்மைக்குப் புதிய பெயர் வைப்பது குறித்து யோசித்து வருகிறது.

பெயர் வைப்பதில் பொது மக்களின் உதவியை அது நாடுகிறது.

குரங்கம்மை என்ற பெயர் ஏற்படுத்தும் சங்கடத்தைத் தவிர்க்க புதிய பெயர் தேடப்படுகிறது. மேலும் பெயரால் தவறான ஊகங்கள் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

உலகச் சுகாதார நிறுவனத்தின் இணையவாசலில் புதிய பெயரைப் பரிந்துரை செய்யலாம்.

1950களில் அந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நோய் பரவிய வட்டாரத்தை வைத்து பெயர் வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அண்மையில் பிரேசிலில் குரங்குகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குரங்கிற்கும் குரங்கம்மைக்கும் தொடர்பில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் விளக்கம் தர நேர்ந்தது.

குரங்கம்மை தற்போது 80 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்