Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுமார் 60 நாடுகளுக்குப் பரவியுள்ள குரங்கம்மை

வாசிப்புநேரம் -
சுமார் 60 நாடுகளுக்குப் பரவியுள்ள குரங்கம்மை

(கோப்புப் படம்: Christopher Black/WHO/Handout)

உலகெங்கும் சுமார் 60 நாடுகளில் 6,000க்கும் அதிகமான குரங்கம்மைச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

குரங்கம்மையின் பரவலை உலக நெருக்கடியாக அறிவிப்பதன் தொடர்பில் அவசரக் கூட்டம் நடத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.

நிறுவனத்தின் முந்தியக் கூட்டத்தில், குரங்கம்மை நோயின் பரவல் அப்போதைக்கு உலக அளவில் சுகாதார நெருக்கடியாகக் கருதப்படவில்லை என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது. 

குரங்கம்மையின் பரவல் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிய நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), நோய்த்தொற்றுச் சம்பவங்களில் 80 விழுக்காடு ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

பரிசோதனைகள் அவ்வளவாக மேற்கொள்ளப்படாத நிலையில், குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

- Reuters/vc

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்