Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவீடனிலும் இத்தாலியிலும் குரங்கம்மை... புதியதொரு கிருமிப்பரவலின் தொடக்கமா?

வாசிப்புநேரம் -

சுவீடனிலும் இத்தாலியிலும் முதல்முறையாக
குரங்கம்மை (Monkeypox) என்ற அரியவகைக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குரங்கம்மைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், கிருமிப்பரவல் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

பாதிப்புக்கு ஆளானவர்கள் மோசமான நிலையில் இல்லை என்றும் அவர்களுக்குப் பராமரிப்பு வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டது.

குரங்கம்மை இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக இத்தாலி சொன்னது.

நாட்டில் மேலும் அதிகமானோருக்குக் கிருமி தொற்றியுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்ளப்படுவதாகக் கூறியது சுவீடன்.

இம்மாதத் தொடக்கத்தில் குரங்கம்மை இருப்பதாகத் தெரிவித்த பிரிட்டன், தற்போது நாட்டில் 9 பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

ஸ்பெயின், கனடா, அமெரிக்கா, போர்ச்சுகல் (Portugal) உள்ளிட்ட நாடுகளும் குரங்கம்மைச் சம்பவங்கள் குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளன.

குரங்கம்மையால் பாதிக்கப்படுவோர், காய்ச்சல், தசை வலி, சோர்வு, தடிப்புகள் ஆகிய அறிகுறிகளை வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டது.

நிலைமையைக் கண்காணிப்பதாக ஐரோப்பிய நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையமும் உலகச் சுகாதார நிறுவனமும் கூறின.

குரங்கம்மை குறித்த முதல் அபாய மதிப்பீட்டு அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடவிருப்பதாக ஐரோப்பிய நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையம் கூறியது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்