Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'தேவைக்கேற்ப வழங்கத் தயார்' - குரங்கம்மைத் தடுப்பூசித் தயாரிப்பாளர்

வாசிப்புநேரம் -
'தேவைக்கேற்ப வழங்கத் தயார்' - குரங்கம்மைத் தடுப்பூசித் தயாரிப்பாளர்

(படம்: Cynthia S. Goldsmith, Russell Regner/CDC via AP)

குரங்கம்மைத் தடுப்பூசிக்கான உலகளாவிய தேவையைக் கையாளமுடியும் என்று அதைத் தயாரிக்கும் Bavarian Nordic நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே குரங்கம்மைத் தடுப்பூசியைத் தயாரிக்க உரிமம் வைத்திருக்கும் ஒரே நிறுவனம் அதுவே.

அந்த உரிமத்தை 2019ஆம் ஆண்டு பெற்றதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் ரோல்ஃப் சாஸ் சொரேன்சன் (Rolf Sass Sorensen) கூறினார்.

அப்போது நூற்றுக்கணக்கான தடுப்பூசிகளை மட்டுமே விற்றுக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தடுப்பூசி பெரியம்மைத் தொற்றுக்கு எதிராகப் பெரியவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

அதை இருமுறை போட்டுக்கொள்ளவேண்டும்.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட பின்னரும் அதைப் போட்டுக்கொள்ளலாம் என்று திரு. சொரேன்சன் தெரிவித்தார்.

எனினும் குரங்கம்மைத் தொற்றுக்கு எதிராகப் பெரிய அளவில் தடுப்பூசி போடப்படுவதை உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்