Skip to main content
பிலிப்பீன்ஸை அடைந்த Kalmaegi சூறாவளி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிலிப்பீன்ஸை அடைந்த Kalmaegi சூறாவளி

வாசிப்புநேரம் -
கால்மேகி (Kalmaegi) சூறாவளி நேற்றிரவு பிலிப்பீன்ஸ் கரையை அடைந்திருக்கிறது.

150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

பருவமழை தொடரலாம்; அதிகபட்சம் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.

தினகட் (Dinagat) தீவுகளில் முதலில் வீசிய சூறாவளி சிபூ (Cebu) நோக்கி நகர்கிறது.

விசயஸ் (Visayas) தீவுக் கூட்டம், மிண்டானவ் (Mindanao) ஆகிய வட்டாரங்களின் சில பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

24 மணி நேரத்துக்குள் கால்மேகி மேலும் வலுவாகலாம் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்