Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட 3,000 Gibson கித்தார்கள்

வாசிப்புநேரம் -
ஆசியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 3,000 போலி Gibson மின்சாரக் கித்தார்களை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அசல் என்றால் அவற்றின் மதிப்பு 18 மில்லியன் டாலராக (24 மில்லியன் வெள்ளி) இருந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

அவை போலியான கித்தார்கள் என்பதை Gibson நிறுவனம் உறுதிப்படுத்தியது.

Gibson நிறுவனம் கடந்த 1894இல் டென்னசி (Tennessee) மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதிகமான மக்கள் விரும்பி வாங்கும் மிகப் பெரிய சந்தையைக் கொண்டது.

இணையம், சாலையோரக் கடைகள், உரிமம் இல்லாத விநியோகிப்பாளர்கள், தனிநபர்கள் ஆகியோர் போலி கித்தார்களை வியாபாரம் செய்துவருவதாக நம்பப்படுகிறது.

ஆண்டிறுதியில் பொருள்கள் வாங்கும் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில் போலி பொருள்கள் குறித்துக் கவனம் தேவை என்று அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.

போலி கிப்சன் கித்தார்கள் குறித்த விசாரணை தொடர்கிறது.

கிப்சன் கித்தார் மதிநுட்பச் சொத்து உடைமைச் சட்டத்தின்கீழ் வருகிறது.

அந்தச் சட்டத்தை மீறினால் 250,000 டாலர் அபராதமும் (சுமார் 334,000 வெள்ளி) 10 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்