சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை இன்று தொடங்குகிறது
வாசிப்புநேரம் -
(படம்: AP)
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது.
உலகின் ஆகப் பெரிய வருடாந்திரச் சமய ஒன்றுகூடல்களில் ஹஜ் யாத்திரையும் ஒன்று.
சவுதி அரேபியாவின் புனித நகரமான மக்காவிற்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் சென்று சேரவிருக்கின்றனர்.
அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதனைக் கையாளப் புதிய நடவடிக்கைகள் அறிமுகம் கண்டுள்ளன.
உலகின் ஆகப் பெரிய குளிரூட்டும் நிலையம் அங்கு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
காற்றைத் தூய்மைப்படுத்தும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
எனினும் யாத்ரீகர்கள் 30 மணி நேரம் வரை வெளிப்புறத்தில் இருக்க வேண்டும்.
மக்காவுக்கு வெளியே உள்ள நாள்களில் சில மணி நேரம் நடக்க வேண்டும்.
யாத்திரைப் பாதை நெடுகிலும் தண்ணீர்க் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.