Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவின் அண்மைத் தாக்குதலை முன்னிட்டு உக்ரேனில் மின்சாரம் துண்டிப்பு

வாசிப்புநேரம் -
ரஷ்யாவின் அண்மைத் தாக்குதலை முன்னிட்டு உக்ரேனில் மின்சாரம் துண்டிப்பு

(படம்: YURIY DYACHYSHYN / AFP)

உக்ரேனின் பல பகுதிகளில் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் பல முக்கிய எரிசக்தி வசதிகள் பாதிக்கப்பட்டன.

உக்ரேனின் எரிசக்தித் தேவைகளில் சுமார் பாதி எட்டப்படவில்லை.

மின்சாரம் எப்போது வழக்கநிலைக்குத் திரும்பும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எரிசக்திக் கட்டமைப்பு மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என்று கீவ் சாடியுள்ளது.

பொதுமக்களைப் பாதிப்பதற்காக அது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக அது குறைகூறியது.

ஆனால் மாஸ்கோ அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

உக்ரேனின் ராணுவத் தளபத்திய அமைப்புகளுடன் தொடர்புள்ள வசதிகளை மட்டும் குறிவைப்பதாக அது கூறியது.

எரிசக்தியை மிச்சப்படுத்த உக்ரேன் அவசரகால மின்தடைகளைச் செயல்படுத்துகிறது.

முக்கியக் கட்டமைப்புகளுக்கு மின்சாரம் கிடைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தேசிய எரிசக்திக் கட்டமைப்பு நிறுவனம் உறுதி அளித்தது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்