Skip to main content
ஜெர்மனியில் கார் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மனியில் கார் தாக்குதல் - தாயும் சேயும் மரணம்

வாசிப்புநேரம் -
ஜெர்மனியின் மியூனிக் (Munich) நகரில் நடத்தப்பட்ட கார் தாக்குதலில் காயமடைந்த தாயும் சேயும் மாண்டனர்.

தாய்க்கு வயது 37, அவரது மகளுக்கு வயது 2.

சென்ற வியாழக்கிழமை (13 பிப்ரவரி) நடந்த தாக்குதலில் குறைந்தது 37 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தொழிற்சங்கப் பேரணியின்போது கூட்டத்துக்குள் செலுத்தப்பட்ட கார் மக்களைக் காயப்படுத்தியது.

காரை ஓட்டியவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 24 வயது ஃபார்ஹாட் என் (Farhad N) என்று ஜெர்மனியின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட அவர் தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டதாக BBC தெரிவித்தது.

மதம் சார்ந்த காரணங்களால் அவர் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்