Skip to main content
குளிர்சாதனப் பெட்டியில் 2 குழந்தைகளின் சடலங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

குளிர்சாதனப் பெட்டியில் 2 குழந்தைகளின் சடலங்கள் - தாய் கைது

வாசிப்புநேரம் -
பிரான்சில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து இரு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டது தொடர்பில் தாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த 50 வயதுப் பெண் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளைக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துப் பதப்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டதாக AFP ஊடகம் கூறுகிறது.

சம்பவம் தொடர்பில் வேரு யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை.

9 பிள்ளைகளுக்குத் தாயான அந்தப் பெண் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறினார்.

அதன்பிறகுதான் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

வீட்டிலிருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் தந்தனர்.

காவல்துறை வீட்டுக்குச் சென்று சோதனையிட்டது.

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மற்றொரு குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டது.

உடனே தாய் மீது சந்தேகம் வந்தது.

கர்ப்பமாக இருப்பது தெரியக்கூடாது என்பதற்காக அந்தப் பெண் பெரிய உடைகளை உடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தைகள் எப்போது பிறந்தன என்பதை அந்தப் பெண்ணால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

ஆனால் அவை 2011, 2018ஆம் ஆண்டுகளில் பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்