Skip to main content
சுவிட்சர்லந்து தீ விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சுவிட்சர்லந்து தீ விபத்து - "அங்க அடையாளங்கள் சிதைந்தன" - தவிக்கும் பெற்றோர்

வாசிப்புநேரம் -
சுவிட்சர்லந்து தீ விபத்து -  "அங்க அடையாளங்கள் சிதைந்தன" - தவிக்கும் பெற்றோர்
படம்: REUTERS

சுவிட்சர்லந்தின் மதுபானக் கூடத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலரின் அங்க அடையாளம் சிதைந்துபோனது.

சம்பவத்தில் 40 பேர் மாண்டனர். 120 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடம்.

தமது 16 வயது மகனைக் காணவில்லை என்று பதறுகிறார் லடீஷியா பிரோடார்ட் (Laetitia Brodard).

கிரான் மொண்டானா (Crans-Montana) நகரில் உள்ள மதுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில் மகன் ஆர்த்தர் (Arthur) தமக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாய் லடீஷியா சொன்னார்.

"அம்மா, புத்தாண்டு வாழ்த்துகள். I love you" என்ற அந்தப் பதிவைக் கனத்தமனத்துடன் பகிர்ந்தார் லடீஷியா.

சம்பவம் நடந்து 40 மணி நேரத்துக்கு மேலாகியும் மகனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை என்று குமுறினார் அவர்.

அவர் உயிருடன் இருக்கக்கூடும். ஆனால் மயக்கநிலையில் பேசமுடியாமல் இருக்கலாம் என்று அந்தத் தாய் நம்பிக்கை கொண்டுள்ளார். அவரைப் போல பலரும் தங்களின் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கலாம் என்று நம்புவதாக லடீஷியா சொன்னார்.

பாதிக்கப்பட்டோரை அடையாளம்காண குடும்பத்தினரின் மரபணு மாதிரிகள் திரட்டப்பட்டிருக்கின்றன.

எனினும் அடையாளத்தை உறுதிசெய்ய நாள்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதுவரை வேதனையிலும் கண்ணீரிலும் மருத்துவமனையில் உறவுகள் காத்திருக்கப்போவதாய்க் கூறின.

உயிருடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பிள்ளைக்கு அருகே கொண்டு செல்லுங்கள் என்று கதறுகின்றனர் பெற்றோர்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்