Skip to main content
ஒரு வாரமாகப் பற்றியெரியும் குப்பை மேடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒரு வாரமாகப் பற்றியெரியும் குப்பை மேடு

வாசிப்புநேரம் -
ஒரு வாரமாகப் பற்றியெரியும் குப்பை மேடு

படம்: CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தா புறநகரில் உள்ள குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் ஒரு வாரமாகத் தீ எரிந்துகொண்டிருக்கிறது.

150,000 சதுர மீட்டர் பரப்பளவில் நெருப்பு பரவியுள்ளது.
அது 21 காற்பந்துத் திடல்களுக்குச் சமம் என்று BBC ஊடகம் சொன்னது.

கடந்த மாதம் 30ஆம் தேதி ஒரு தீப்பொறி பற்றியது.

மலைபோல் குவிந்துகிடக்கும் குப்பை பலத்தக் காற்றில் பற்றி எரியத் தொடங்கியது.

தீயணைப்பாளர்களால் உயரமான இடத்தை எட்டமுடியவில்லை. அவர்கள் ஹெலிகாப்டர்களையும் ஆளில்லா வானூர்திகளையும் பயன்படுத்துகின்றனர் என்று BBC கூறியது.

பக்கத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கரும்புகை சூழ்ந்திருக்கிறது.

கடந்த வாரம் அங்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வார இறுதிக்குள் தீயை அணைத்து விடலாம் என்று கூறப்படுகிறது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்