Skip to main content
பிரிட்டன், ஸ்பெயின் மீது அதிபர் டிரம்ப் வருத்தம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரிட்டன், ஸ்பெயின் மீது அதிபர் டிரம்ப் வருத்தம்

வாசிப்புநேரம் -
பிரிட்டன், ஸ்பெயின் மீது அதிபர் டிரம்ப் வருத்தம்
(படம்: Jim WATSON / AFP)

ஈரான் தாக்குதலில் ஸ்பெயின், பிரிட்டன் ஆதரவு தர மறுப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டணியில் உள்ள ஸ்பெயினும், பிரிட்டனும் அவற்றின் ஆகாயப் படைத் தளங்களை ஈரானைத் தாக்குவதற்குப் பயன்படுத்த மறுப்புத் தெரிவித்தன.

ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத் தொடர்புகளையும் நிறுத்திக்கொள்ளும்படி அமெரிக்க நிதியமைச்சருக்குச் சொல்லியிருப்பதாகக் கூறினார் திரு டிரம்ப்.

தனது நிலைப்பாட்டைத் தற்காத்துப் பேசிய ஸ்பெயின், ஐக்கிய நாட்டு நிறுவனச் சாசனத்துக்குட்பட்ட செயல்களை மட்டுமே ஆதரிக்க முடியும் என்று கூறியது.

பிரிட்டனுடனான உறவும் முன்புபோல் இல்லை என்று திரு டிரம்ப் சாடினார். பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) ஈரான் மீதான தாக்குதலில் கலந்துகொள்ளத் தொடக்கத்தில் மறுத்தார்.

பிறகு, பிரிட்டனின் இரண்டு தளங்களை குறிப்பிட்ட சில தற்காப்பு அம்சங்களுக்கு மட்டும் பயன்படுத்த அவர் சம்மதித்தார்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்