Skip to main content
தீப்பற்றி எரியும் கார்... உள்ளே சிக்கிய 9 மாதக் குழந்தை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தீப்பற்றி எரியும் கார்... உள்ளே சிக்கிய 9 மாதக் குழந்தை

வாசிப்புநேரம் -
தீப்பற்றி எரியும் காரிலிருந்து தம் 9 மாதக் குழந்தையைக் காப்பற்றிய வழிப்போக்கர்கள் இருவருக்கு அந்தப் பிள்ளையின் தாய் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வேல்ஸ் (Wales) பகுதியில் காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது புகை வருவதைக் கவனித்தார் அலெக்ஸ் மெக்லீன் (Alex McClean).

உடனே காரைவிட்டு வெளியேறிவிட்டார்.

ஆனால் காரில் இருந்த தமது குழந்தையை அவரால் வெளியேற்ற முடியவில்லை என்று BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

காரின் எந்தக் கதவையும் அவரால் திறக்க முடியவில்லை.

கார் வேகமாகத் தீப்பற்றத் தொடங்கியது.

அலெக்ஸ் உதவி கேட்டுக் கதறினார்.

கார் சன்னலை உடைக்க முயன்றார்... அதுவும் முடியவில்லை.

அதைக் கண்ட வெஸ்லி பேனன்னும் (Wesley Beynon) அவரது உறவினர் மார்க் வில்டிங்கும் (Marc Willding) உடனே உதவ முன்வந்தனர்.

காரின் ஓட்டுநர் இருக்கை வழி சென்று காரின் பின் இருக்கையில் இருந்த குழந்தையை அவர்கள் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

குழந்தையை வெளியேற்றிய சுமார் 30 விநாடிகளில் கார் முழுதும் தீப்பற்றி எரிந்ததாக BBC கூறியது.

தமக்கு உதவிய இருவரையும் மறக்கவே முடியாது என்றார் அலெக்ஸ்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்