Skip to main content
புலம்பலைக் கேட்பதற்குப் பணம் வாங்கும் ஆடவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

புலம்பலைக் கேட்பதற்குப் பணம் வாங்கும் ஆடவர்

வாசிப்புநேரம் -
புலம்பலைக் கேட்பதற்குப் பணம் வாங்கும் ஆடவர்

படம்: Instagram/Prithviraj Bohra

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கையில் பலகை... "உங்களின் பிரச்சினையைச் சொல்ல விரும்பினால், நான் கேட்கிறேன்." பலகையில் ஆடவரின் படமும் அவரின் கைத்தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரச்சினையைச் சொல்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பதும் பலகையில் எழுதப்பட்டுள்ளது. பிரச்சினையைப் பொறுத்துக் கட்டணம் வேறுபடும். சிறிய பிரச்சினை என்றால் 250 ரூபாய் ($3.40). பெரிய பிரச்சினை என்றால் 500 ரூபாய். சாய்ந்துகொள்ள ஒரு தோள் தேவை என்றால் 1,000 ரூபாய். இந்தியாவின் மும்பை கடற்கரையில் பலகையுடன் திரியும் பிரித்விராஜ் போராவுக்கு (Prithviraj Bohra) அதுவே தொழில். அவரைத் தேடி மக்கள் வருவதாக NDTV ஊடகம் சொன்னது. பிரித்விராஜின் வர்த்தக யோசனையை இணையவாசிகள் சிலர் பாராட்டினர். "நானோ என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இலவசச் சேவை வழங்குகிறேன்!" என்று ஒருவர் வேடிக்கையாகப் பதிவிட்டார். சிலரோ ஒருவரின் வேதனையைக் கேட்கப் பணம் வசூலிக்கக்கூடாது என்று சாடினர்.
 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்