Skip to main content
காளானை வைத்துப் பொட்டலமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காளானை வைத்துப் பொட்டலமா?

வாசிப்புநேரம் -
காளானை வைத்துப் பொட்டலமா?
படம்: Nicolas TUCAT / AFP
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிளாஸ்டிக்கில் பொட்டலம் கட்டுவது வழக்கம்...

அதைக் காளானில் செய்துகாட்டியுள்ளது ஒரு நிறுவனம்.

பிரசல்ஸில் (Brussels) பர்மாஃபங்காய் (Permafungi) எனும் நிறுவனம் சவர்க்காரப் பொட்டலம் செய்கிறது.

காளானால் செய்யப்படும் பொட்டலம் மக்கிப் போய்விடும். கடலில் மாசை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கைவிட அது சிறந்தது என்று பர்மாஃபங்காய் கூறுகிறது.

சிறிய நிறுவனமாகத் தொடங்கிய பர்மாஃபங்காய் இப்போது தொழிற்சாலையை அமைக்கிறது.

தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகள் அங்கு சேகரிக்கப்படுகின்றன.

பின்னர் கழிவுகளில் mycelium எனும் காளான் வளர்க்கப்படும்.

பசுமையான முறையில் வளர்க்கப்படும் காளான் பின்னர் பொட்டலங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

எனினும் நிறுவனத்தின் முயற்சி செழிக்குமா என்பது தெரியவில்லை.

நிறுவனம் தற்போதைக்கு நட்டத்தையே சந்திக்கிறது.

நிறுவனம் நிலைத்திருக்க அடுத்த 2, 3 ஆண்டுகளுக்குள் லாபம் கிடைக்கவேண்டும்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்