Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 1,500 மியன்மார் குடியேறிகள்

வாசிப்புநேரம் -
மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 1,500 மியன்மார் குடியேறிகள்

படம்: AFP/Sai Aung Main

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவிலிருந்து சுமார் 1,500 மியன்மார் குடியேறிகள் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களை ஏற்றிச்சென்ற மூன்று மியன்மார் கடற்படைக் கப்பல்கள் இன்று காலை யங்கூன் சென்றடைந்தன.

மொத்தம் 1,476 பேர் நாடு திரும்பியதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்தது.

அவர்களை வரவேற்க அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் காத்திருந்தனர்.

சிலர் தங்கள் உறவினர்களின் பெயர் அல்லது படங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.

ஆனால் பெரும்பாலோர் உடனடியாகத் தங்கள் உறவினர்களைச் சந்திக்க முடியவில்லை.

நாடு திரும்பியவர்கள் யங்கூனின் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

அங்கு குடும்பத்தினர் அவர்களைச் சந்திக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

5,000 பேரைத் திருப்பி அனுப்பத் திட்டம்

மியன்மார் குடியேறிகள் 5,000 பேரைத் திருப்பி அனுப்ப மலேசியா திட்டமிட்டுள்ளது. அவர்களில் முதல் குழுவினர் யங்கூன் சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தாங்களாகவே நாடு திரும்ப ஒப்புக்கொண்டதாக மலேசியா கூறுகிறது.

ஆனால் ஐக்கிய நாட்டு நிறுவனமும் மனித உரிமை அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

நாடு திரும்பும் முடிவை அவர்கள் சுதந்திரமாக எடுத்தார்களா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை என்று ஐநா அகதிகள் அமைப்பு கூறியது.

அவர்களை நேரில் சந்திக்க ஐநா ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்