Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மார் மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயார்:ஐரோப்பிய ஒன்றியம்

மியன்மார் மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராயிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மியன்மார் மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயார்:ஐரோப்பிய ஒன்றியம்

படம்: AFP

மியன்மார் மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராயிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மியன்மார் ராணுவத்தின் வன்முறை அதிகரிக்கும் சூழலில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கு எதிராக அனைத்துலக அளவில் ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஒன்றியம் வலியுறுத்தியது.

காயா மாநிலத்தில் சென்ற வாரம் நடத்தப்பட்ட வன்முறையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டனர்.

கிராமத்தில், ராணுவத்தின் சோதனைக்குக் கட்டுப்பட மறுத்த, ஆயுதமேந்திய பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக மியன்மார் ராணுவம் கூறியது.

மியன்மார் ராணுவம், அதன் தலைவர்கள், நிறுவனங்கள் ஆகிய தரப்புகள் மீது பிப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்தது.

மியன்மார் ராணுவ அரசாங்கத்துக்கான நிதி உதவியையும் ஒன்றியம் நிறுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa