Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மோக்கா சூறாவளிப் பாதிப்பு : நிவாரணப் பொருள்கள் சென்று சேர்வதை மியன்மார் ராணுவ அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்

வாசிப்புநேரம் -
மோக்கா சூறாவளிப் பாதிப்பு : நிவாரணப் பொருள்கள் சென்று சேர்வதை மியன்மார் ராணுவ அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்

(படம்: Reuters/Partners Relief and Development)

மியன்மாரில் மோக்கா (Mocha) சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் சென்று சேர்வதை அங்குள்ள ராணுவ அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இம்மாதம் (மே) 14 ஆம் தேதி மோக்கா சூறாவளி மியன்மாரிலும், பங்களாதேஷிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

மியன்மாரில் 148 பேர் உயிரிழந்ததாக ராணுவம் கூறியது. அவர்களில் பெரும்பாலோர் ரக்கைன் (Rakhine) மாநிலத்தில் வசிக்கும் சிறுபான்மை ரொஹிஞ்சா இனத்தவர் என்று தெரிகிறது. மாண்டோர் எண்ணிக்கை அதிகமாயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மியன்மாரில் பாதிப்புகளை மதிப்பிட ராணுவ ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமைக் குழுத் தலைவர் வோல்க்கர் டர்க் (Volker Turk) கேட்டுக்கொண்டார்.

பேரிடர்களின்போது உயிர் உடைமைச் சேதங்களைத் தவிர்க்க இயலாது என்று கூறிய அவர், மனிதநேய உதவிப் பணிகளைத் தொடர மியன்மார் ராணுவம் தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதாகச் சாடினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்