ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் மர்மமான கறுப்புப் பந்துகள்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருக்கும் பிரபலக் குஜி (Coogee) கடற்கரையில் தார் போன்ற நூற்றுக்கணக்கான கறுப்புநிற மர்மப் பந்துகள் நேற்று (15 அக்டோபர்) கரையொதுங்கின.
அதனால் கடற்கரை மூடப்பட்டுள்ளது.
அந்தப் பந்துகளைப் பற்றியும் அவை எங்கிருந்து வந்தன என்பதையும் அறிய அதிகாரிகள் முனைகின்றனர்.
கடற்கரையில் நூற்றுக்கணக்கான கறுப்புப் பந்துகள் கிடப்பது படங்களில் காணப்படுகிறது.
அவற்றைக் கடற்பறவைகள் கொத்திப் பார்க்கின்றன.
எண்ணெய், குப்பைகளுடனும் தண்ணீருடனும் கலக்கும்போது தார்ப் பந்துகள் உருவாகலாம் என்று சிட்னி நகரின் மேயர் பார்கர் கூறினார்.
எண்ணெய்க் கசிவு காரணமாக இருக்கலாம்.
இரவு முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலையும் கடற்கரை மூடப்பட்டிருந்தது.
குஜி கடற்கரைக்கு அருகில் இருக்கும் மற்ற கடற்கரைகள் கண்காணிக்கப்படுகின்றன.