Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முதன்முறையாக Oscar விருதுகளில் இந்தியப் பாடல் நியமனம் - 'RRR' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்!

வாசிப்புநேரம் -

RRR திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் (Oscar) விருதுகளில் சிறந்த பாடலுக்கான நியமனத்தைப் பெற்றுள்ளது.

சிறந்த பாடலுக்கான நியமனத்தில் இடம்பெற்றுள்ள முதல் இந்தியப் பாடல் அதுவே என்று Deadline செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

MM கீரவாணியின் இசையில் வெளியான அந்தப் பாடல், Lady Gaga, Rihannaவின் பாடல்களுடன் போட்டியிடவிருக்கிறது.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள Academy Awardsஇன்போது வெற்றி பெறும் பாடல் அறிவிக்கப்படும்.

பாடலுக்கு இசையமைத்த MM கீரவாணி நியமனம் குறித்து எல்லையற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலிருந்து முதல்முறையாக சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் நியமனம் தாம் இசையமைத்த பாடலுக்குக் கிடைத்ததை எண்ணிப் பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.


 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்