Skip to main content
21ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த நடால்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

21ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த நடால்

வாசிப்புநேரம் -
21ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த நடால்

படம்: William WEST / AFP

வெளியீடு : 31 Jan 2022 09:13AM புதுப்பிப்பு : 31 Jan 2022 09:28AM

ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபாயல் நடால் (Rafael Nadal) 21ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்விட்சர்லந்தின் ரோஜர் ஃபெடரரும் (Roger Federer) செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் (Novak Djokovic) ஆளுக்கு 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியப் பொது விருதை வென்றதன் மூலம் அந்தச் சாதனையைப் படைத்துள்ளார், நடால்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்த டேனியல் மெட்வெடேவுடன் (Daniil Medvedev) பொருதினார்.

முதல் 2 ஆட்டங்களுக்கு மெட்வெடேவ் முன்னணியில் இருந்தார்.

ஆனால் இறுதியில், நடால் வெற்றி கிண்ணத்தைக் கைப்பற்றினார்.

கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் நீடித்த போட்டியின் செட் விவரம் 2-6, 6-7, 6-4, 6-4, 7-5.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்