Skip to main content
11 ஆண்டு செவ்வாய்க் கிரகப் பயணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

11 ஆண்டு செவ்வாய்க் கிரகப் பயணம் - கைவிட்டது NASA

வாசிப்புநேரம் -
11 ஆண்டு செவ்வாய்க் கிரகப் பயணம் - கைவிட்டது NASA

(படம்: NASA/Goddard/University of Colorado/Laboratory for Atmospheric and Space Physics/Handout via REUTERS)

வெளியீடு : 04 Jun 2026 10:41AM புதுப்பிப்பு : 04 Jun 2026 12:58PM
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA செவ்வாய்க் கிரகத்தை ஆராயும் விண்வெளிப் பயணத்தைக் கைவிட்டிருக்கிறது.

MAVEN விண்வெளிக் கலன் 11 வருடமாகச் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி வந்தது.

6 மாதத்துக்கு முன்பு அதன் தொடர்பு அறுந்தது.

2013இல் புறப்பட்ட அந்த விண்வெளிக் கலன் ஒரு வருடம் செவ்வாய்க்கிரகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புவதுதான் திட்டம்.

ஒரு வருடம் 13 வருடமாகி, மீட்க முடியாத நிலைக்குப் போய்விட்டது.

தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராயப் போவதாக NASA சொன்னது.

MAVEN விண்வெளிக் கலன் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலத்தை ஆராயவும் அது எப்படிக் குறைந்தது என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவியது.

சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலம் அடர்த்தியாக இருந்தது.

அதன் மேற்பரப்பில் நிறையத் தண்ணீரும் இருந்தது.

மனித வாழ்வுக்கு ஏற்ற சூழல் செவ்வாய்க் கிரகத்தில் அமைந்திருந்தது.

ஆனால் அதன் வளிமண்டலத்தின் அடர்த்தி குறைந்ததால் செவ்வாய்க் கிரகம் இப்போது வாழத் தகாத இடமாகிவிட்டது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்