Skip to main content
Artemis இரண்டு குழு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Artemis இரண்டு குழு - விரைவில் பூமிக்குத் திரும்பும்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவுக்கு அனுப்பிய ஆர்ட்டெமிஸ் (Artemis) இரண்டு குழு பூமிக்குத் திரும்பவிருக்கிறது. ஆர்ட்டெமிஸ் குழுவினரும் விமானக் கட்டுப்பாட்டுக் குழுவினரும் அதற்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றனர். விண்வெளி வீரர்கள் சிங்கப்பூர் நேரப்படி வரும் சனிக்கிழமை காலை சுமார் 8 மணிக்குப் பூமிக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கலிபோர்னியா (California) மாநிலத்தின் சான் டியேகோ (San Diego) கடற்கரைக்கு அருகே தரையிறங்குவர். அதற்கேற்ப ஏற்பாடுகள் மும்முரமாய் நடைபெறுகின்றன. இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம் கற்றுக்கொண்ட அனைத்துமே எதிர்காலப் பயணத்திற்குக் கைகொடுக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியது. கடந்த சில நாள்களாகப் பல அபாயங்களைச் சந்தித்து அவற்றைச் சமாளித்திருப்பதாகவும் நிறுவனம் சொன்னது. பூமிக்குத் திரும்பும் வரை குழு தொடர்ந்து கவனமாய் இருக்கும் என்றது.
 

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்