Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"ரஷ்ய-உக்ரேன் போர் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது" - நேட்டோ கூட்டணியின் தலைவர்

வாசிப்புநேரம் -
நேட்டோ கூட்டணியின் தலைவர் யென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க் (Jens Stoltenberg) ரஷ்ய-உக்ரேன் போர் சீக்கிரத்தில் முடிவுக்கு வரப்போவதில்லை என்று எச்சரித்துள்ளார்.

அது பல காலம் நீடிக்கக்கூடும் என்றார் அவர்.

முதன்முறையாக மூளும் பெரும்பாலான போர் கணித்ததைவிட நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று ஜெர்மானிய ஊடகத்திடம் திரு. ஸ்டோல்ட்டன்பர்க் கூறினார்.

ரஷ்ய-உக்ரேன் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று நாடுகள் விரும்புகின்றன.

ஆனால், உக்ரேன் போரைக் கைவிட்டால் அரசுரிமை பெற்ற தனி நாடாக இயங்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் திரு. ஸ்டோல்ட்டன்பர்க்.

உக்ரேனில் உள்ள தனது துருப்புகளை ரஷ்யா மீட்டுக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்குவரும் என்றார் அவர்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்