நேட்டோ மாநாட்டில் ஆயுதத் திட்டம் அறிவிக்கப்படும்?
AP Photo/Riza Ozel
This audio is generated by an AI tool.
நேட்டோ (NATO) தலைமைச் செயலாளர் மார்க் ரட் (Mark Rutte) ஐரோப்பா தற்காப்புக்குக் கணிசமாக நிதி ஒதுக்கியிருப்பதாகக் கூறியுள்ளளார்.
துருக்கியே தலைநகர் அங்காராவில் நடைபெறும் மாநாட்டில் அவர் சில திட்டங்களை அறிவித்தார்.
அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் (64.6 பில்லியன் வெள்ளி) என்று நேட்டோ அதிகாரி ஒருவர் சொன்னார்.
மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதத் திட்டத்தைப் பின்னர் அறிவிக்கக்கூடும்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 12 நாடுகள் அடுத்த பத்தாண்டில் துல்லியத் தாக்குதலுக்கான ஆயுதங்களைத் தயாரிக்க அந்த நிதியைப் பயன்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் அவற்றின் தற்காப்புக்குக் கூடுதலாகச் செலவு செய்யவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதற்கு இணங்கப் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவதாகப் கருதப்படுகிறது.
இந்நிலையில் திரு டிரம்ப், நேட்டோ நட்பு நாடுகள் மீதான ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மத்திய கிழக்குப் பூசலில் அவை அமெரிக்காவுக்குத் தோள்கொடுக்கவில்லை என்று அவர் சாடினார்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.
மாநாட்டை ஏற்று நடத்தும் துருக்கியேவின் அதிபருடன் நட்புறவு இல்லாவிட்டால் சந்திப்புக்கு வந்திருக்கமாட்டேன் என்று திரு டிரம்ப் கூறினார்.