Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நேட்டோக் கூட்டணியும் ஜப்பானும் தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதி

வாசிப்புநேரம் -
நேட்டோக் கூட்டணியும் ஜப்பானும் தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதி தெரிவித்துள்ளன.

நேட்டோ தலைமைச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க் (Jens Stoltenberg) , ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் (Fumio Kishida) தோக்கியோவில் பேச்சு நடத்தினார்.

ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் மிரட்டல்களை எதிர்கொள்ளத் தங்களின் வலுவான பங்காளித்துவம் தொடர வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

இவ்வட்டாரத்தில் நடப்பவை நேட்டோவுக்கு முக்கியம் என்று திரு. ஸ்டோல்ட்டன்பர்க் குறிப்பிட்டார்.

அதே போல் ஐரோப்பாவில் நிகழ்பவை ஜப்பானுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.

உக்ரேனில் ரஷ்ய அதிபர் புட்டின் வெற்றிபெற்றால் படைபலத்தின் மூலம் சர்வாதிகார ஆட்சிகள் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற செய்தியை அது அனுப்பும் என்று திரு. ஸ்டோல்ட்டன்பர்க் கூறினார்.

அது ஆபத்தானது என்றும் சீனாவும் அத்தகைய போக்கை எதிர்காலத்தில் பின்பற்றக்கூடும் என்றும் நேட்டோ தலைமைச் செயலாளர் எச்சரித்தார்.

ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

முன்னதாகத் திரு. ஸ்டோல்ட்டன்பர்க் இருமா (Iruma) ஆகாயப் படைத் தளத்துக்கு வருகையளித்தார்.

ஜப்பானியத் தற்காப்புப் படையினரை அவர் சந்தித்தார்.

உக்ரேனுக்குத் தோக்கியோ வழங்கும் விமானங்களுக்கும் சரக்குப் போக்குவரத்து வசதிகளுக்கும் திரு. ஸ்டோல்ட்டன்பர்க் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்