Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிறுநீர்... உலகைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றுமா?

வாசிப்புநேரம் -

செடிகளில் சிறுநீர் கழி

என்று அந்தக் காலத்தில் சிலரது பாட்டி, தாத்தாக்கள் கூறியிருக்கலாம்...

மனிதச் சிறுநீரைக் கொண்டு செடிகளுக்கு உரம் அளிப்பது சற்று பழமையான யோசனையைப் போல் தோன்றலாம். 

ஆனால் ஆய்வாளர்கள் ரசாயனங்களை நம்பியிருக்காமல் சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டைத் தவிர்க்கும் வழிகளில், விளையும் பயிருக்கு உரமளிப்பது எப்படி என்று கண்டுபிடிக்க முனைகின்றனர். 

அதில் மனிதச் சிறுநீர் ஒரு தெரிவாக அமைந்துள்ளது. செடிகளுக்குத் தேவையான நைட்ரோஜன், பாஸ்பரஸ், பொட்டேசியம் (nitrogen, phosphorus, potassium) ஆகிய சத்துகள் மனிதர்களின் சிறுநீரில் உள்ளன. 

செயற்கை உரங்களால் வெப்பவாயு வெளியேற்றம், நீர்த் தூய்மைக்கேடு போன்ற இயற்கைப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மனிதச் சிறுநீரில் இருக்கும் சத்துகள் இயற்கை உரத்தைக் கொடுக்கும் வாய்ப்பாக அமைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். 

விவசாயத்தில் தேவைப்படும் மொத்த நைட்ரோஜன், பாஸ்பரஸ், பொட்டேசியம் ஆகிய சத்துகளில் 13 விழுக்காட்டை உலகளவிலான மனிதக் கழிவுநீரிலிருந்து பெறலாம் என்று 2020ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa