Skip to main content
நவநீதம் பிள்ளைக்கு நொபெல் பரிசு, தமிழருக்குப் பெருமை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நவநீதம் பிள்ளைக்கு நொபெல் பரிசு, தமிழருக்குப் பெருமை - விஜய் புகழாரம்

வாசிப்புநேரம் -
நவநீதம் பிள்ளைக்கு நொபெல் பரிசு, தமிழருக்குப் பெருமை - விஜய் புகழாரம்

படங்கள்: Agnes Callamard/via REUTERS, Chief Minister of Tamil Nadu/Facebook

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Oct 2026 01:47PM புதுப்பிப்பு : 11 Oct 2026 02:51PM
உலக அமைதிக்கும் மனித உரிமைக்கும் அயராது குரல் கொடுத்த நவநீதம் பிள்ளைக்கு நொபெல் பரிசு கிடைத்ததற்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழரான திருவாட்டி நவநீதம் பிள்ளை இவ்வாண்டுக்கான நொபெல் பரிசைப் பெறுகிறார்.

அது உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக அவர் கூறினார்.

திருவாட்டி நவநீதம் பிள்ளைக்கு வயது 85. அவர் 1941 செப்டம்பர் 23ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான சட்டப் போராட்டங்களில் அவர் தமது பயணத்தைத் தொடங்கினார்.

உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகவும் அவர் பதவி வகித்தார்.

மனித உரிமை, சமத்துவம், நீதி, உலக அமைதி ஆகியவற்றுக்காக அவர் தொடர்ந்து பாடுபட்டதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.

அனைத்துலக அரங்கில் மனித உரிமைக்கும் நீதிக்கும் குரல் கொடுத்த திருவாட்டி நவநீதம் பிள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அவர் X தளத்தில் பதிவிட்டார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்