Skip to main content
கூடைப்பந்தில் வரலாறு படைத்த டோன் நெல்சன் காலமானார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கூடைப்பந்தில் வரலாறு படைத்த டோன் நெல்சன் காலமானார்

வாசிப்புநேரம் -
கூடைப்பந்தில் வரலாறு படைத்த டோன் நெல்சன் காலமானார்

Frederic J. BROWN / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கூடைப்பந்து வரலாற்றில் தலைசிறந்த விளையாட்டாளர்களில் ஒருவரும் பயிற்றுவிப்பாளருமான திரு டோன் நெல்சன் (Don Nelson) காலமானார்.

அவருக்கு வயது 86.

Boston Celtics அணியில் விளையாடிய போது NBA கூடைப்பந்துப் போட்டியை 5 முறை வென்றவர்.

திரு நெல்சன் 1966 முதல் 1976 வரை அணியில் இருந்தார்.

அவரைக் கௌரவிக்கத் திரு நெல்சன் பயன்படுத்திய சட்டை எண் 19ஐ Boston Celtics பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டது.

1976 முதல் 2010ஆம் ஆண்டு வரை திரு நெல்சன் பயிற்றுவிப்பாளராகப் பல்வேறு அணிகளின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

31 பருவங்களுக்கும் மேல் பயிற்றுவிப்பாளராக இருந்து, NBA வரலாற்றில் இரண்டாம் அதிக வெற்றிகளைக் குவித்த பெருமையும் அவரைச் சேரும்.

மூன்று முறை சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதையும் பெற்றார் திரு நெல்சன்.

அவரின் பெயர் Hall of Fame பட்டியலில் 2012 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்