Skip to main content
"கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை" - இந்தியா கண்டனம்

வாசிப்புநேரம் -
"கனடாவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை" -  இந்தியா கண்டனம்

Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதிகளைக் கொல்லத் தீட்டப்பட்ட சதித்திட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

அந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இந்தியா கூறியது.

கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் (David Morrison) கனடிய நாடாளுமன்றத்தில் அந்தக் குற்றச்சாட்டைச் சொன்னார்.

ஆனால் அதற்கான ஆதாரம் எதனையும் கனடா வெளியிடவில்லை.

திரு. அமித் ஷாவுக்கு எதிரான அந்தக் குற்றச்சாட்டைப் பற்றிக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தகவல் கிடைத்ததாக இந்திய அரசாங்க வட்டாரம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு வான்கூவரில் (Vancouver) சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் (Hardeep Singh Nijjar) படுகொலை செய்யப்பட்டார். அதில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடியப் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

பிறகு இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இரு நாடுகளும் அரசதந்திரிகளை வெளியேற்றியுள்ளன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்