Skip to main content
இந்தியாவில் தீபாவளி வரிச்சலுகை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் தீபாவளி வரிச்சலுகை

வாசிப்புநேரம் -
இந்தியாவில் தீபாவளிக்கு முன்பாக, சீர்திருத்தப்பட்ட பொருள் சேவை வரி நடப்புக்கு வரவிருக்கிறது.

எட்டு ஆண்டில் இல்லாத அளவுக்கு வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரி இறக்கம்

🧈 வெண்ணெய்: 12% --> 5%

🧴 ஷாம்பு: 18% --> 5%

📺 தொலைக்காட்சி: 28% --> 18%

ஆடம்பரப் பொருள்களுக்கும் சிகரெட் போன்ற உடல்நலனைக் கெடுக்கும் பொருள்களுக்கும் அதிக வரி நீடிக்கலாம்.

இவற்றைப் பரிசீலித்த பிறகு அடுத்த வாரம் பொருள் சேவை வரி மன்றம் இறுதி முடிவை எட்டும்.

இந்தியப் பொருள்கள் மீதான 50 விழுக்காட்டு அமெரிக்க வரி இந்தச் சீர்திருத்தத்திற்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

மத்திய, மாநில அரசாங்கங்களின் வருவாய் குறைய வாய்ப்பிருக்கிறது.

பயனீட்டாளர்கள் அதிகமாகச் செலவிட்டால் வருவாய் இழப்பை ஈடுகட்ட முடியும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் வரி குறைந்தால் பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட பிற செலவுகளைச் சமாளிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்