Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

6,000க்கும் அதிகமான மலையேறிகள், 300க்கும் அதிகமான மரணங்கள் - எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் ஏறிய 70 ஆண்டுகள் நிறைவு

வாசிப்புநேரம் -


எவரெஸ்ட் சிகரத்தை மனிதர்கள் முதல் முறையாக 1953ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி தொட்டனர்.

8,849 மீட்டர் உயரம் கொண்ட மலையை ஏறிய முதல் மனிதர்கள் என்ற பெயரும் புகழும் எட்மண்ட் ஹில்லரியையும் (Edmund Hillary) டென்சிங் நொர்கே ஷெர்பாவையும் (Tenzing Norgay Sherpa) சேரும்.

இருவரும் சிகரத்தை முதல்முறையாக ஏறி 70 ஆண்டுகளாகிவிட்டன.

அதைக் கொண்டாட அவர்களின் மகன்கள் நேப்பாளத்தில் பல ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

"எங்கள் இருவரின் தந்தையர் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடவில்லை. அனைத்து மனிதகுலமும் அதைத் தொட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் அதைச் செய்யலாம் என்று உணர்த்தும் செயல் அது" என்றார்  எட்மண்ட் ஹில்லரியின் மகன் பீட்டர் ஹில்லரி (Peter Hillary).

கடந்த 70 ஆண்டுகளில் 6,000க்கும் அதிகமான மலையேறிகள் உலகின் ஆக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தை ஏறியுள்ளனர்.

அதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  ஐவரை இதுவரை காணவில்லை.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்