நேப்பாளப் பொதுத் தேர்தலில் பாலேந்திர ஷா வெற்றி
நேப்பாளப் பொதுத் தேர்தலில் காட்மாண்டு மேயர் பாலேந்திர ஷாவின் (Balendra Shah) கட்சி மகத்தான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
பொதுத் தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்படுகின்றன.
ஷா வழிநடத்தும் ராஷ்டிரிய சுவதந்திரா (Rastriya Swatantra) கட்சி 100 இடங்களில் முன்னால் உள்ளதை ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன.
மொத்தம் 165 நாடாளுமன்ற இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.
ராஷ்டிரிய சுவதந்திரா கட்சி கீழவையில் 3இல் 2 பங்கு இடங்களை வென்றுவிடுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நேப்பாளத்தின் ஆகப் பழைமையான அரசியல் கட்சியான நேப்பாளக் காங்கிரஸ் கட்சி, தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னாள் பிரதமர் K P ஷர்மா ஒலியின் கம்யூனிஸ்ட் கட்சி எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை.