Skip to main content
நேப்பாளத்தின் முன்னாள் பிரதமருக்குக் கைதாணை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நேப்பாளத்தின் முன்னாள் பிரதமருக்குக் கைதாணை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேப்பாளத்தின் முன்னாள் பிரதமர் ஷெர் பஹதூர் டியூபாவிற்கு (Sher Bahadur Deuba) கைதாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அவர் ஊழல் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

79 வயது டியூபா மருத்துவச் சிகிச்சை பெற வெளிநாடு சென்றிருக்கிறார்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதன் தொடர்பில் தம் மீதும் தமது குடும்பத்தின்மீதும் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

டியூபா குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அவரது மனைவி அர்ஸு ரானா டியூபாவிற்கும் (Arzu Rana Deuba) கைதாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அவர் நேப்பாளத்தின் முன்னைய வெளியுறவு அமைச்சரும் கூட. 

கணவன், மனைவி இருவரும் அண்மையில் சிங்கப்பூரில் இருந்ததாக நேப்பாள ஊடகங்கள் தெரிவித்தன.

அனைத்துலகக் காவல்துறையின் உதவியைப் பெற நேப்பாளத்தின் காவல்துறை முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, 35 வயது பாலேந்திரா ஷா (Balendra Shah) நேப்பாளத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்