நேப்பாள வெள்ளம்: நிவாரண முகாம்களில் பெண்களுக்குப் பெரும் சிக்கல்
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நேப்பாளப் பெருவெள்ளத்தில் வீடிழந்த ஆயிரக்கணக்கானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஆனால் அங்கு பெண்களுக்குப் போதிய கழிப்பறை, தண்ணீர் வசதிகள் இல்லாதது புதிய சவாலாகியுள்ளது.
நுவாகோட் (Nuwakot) மாவட்டத்தில் பள்ளியொன்றில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு 400க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். ஆனால் மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.
அவற்றில் குழாய் நீர் வசதியும் இல்லை என்று AFP ஊடகம் கூறுகிறது.
40 வயது அஞ்சு புஜெல் (Anju Bhujel) தமது இரண்டு குழந்தைகளுடன் அங்கு தங்கியுள்ளார். வெள்ளத்தில் அவரது வீடு அடித்துச் செல்லப்பட்டது.
மாதவிடாய்ச் சுகாதாரம் பெரும் பிரச்சினையய் இருப்பதாகத் திருவாட்டி புஜெல் கூறினார்.
ஒரு தொண்டு நிறுவனம் மாதவிடாய் அணையாடைகளை வழங்கியுள்ளது. ஆனால் பயன்படுத்தியவற்றை முறையாக அகற்ற வசதியில்லை என்றார் அவர்.
யோகிதா தமாங் (Yogita Tamang), தமது 20 பேர் கொண்ட குடும்பத்துடன் ஒரே வகுப்பறையில் தங்கியுள்ளார்.
“மாதவிடாய் அணையாடைகள் தருகிறார்கள். ஆனால் எங்களிடம் உள்ளாடைகளே இல்லை. அவற்றை வைத்து என்ன செய்வது?” என்று அவர் கண்ணீருடன் கேட்டுள்ளார்.
ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பு பெண்களுக்குக் குளிக்கும் சவர்க்காரம், உள்ளாடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்குகிறது.
எனினும் குடிநீருக்குத் தட்டுப்பாடு இருப்பதாக முகாமில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : AFP