Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பருவநிலை மாற்றத்திற்கு அனைத்துலக நடவடிக்கை: நேப்பாளப் பிரதமர் வேண்டுகோள்

வாசிப்புநேரம் -
பருவநிலை மாற்றத்திற்கு அனைத்துலக நடவடிக்கை: நேப்பாளப் பிரதமர் வேண்டுகோள்

(படம்: Prabin RANABHAT / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேப்பாளப் பிரதமர் பாலேந்திர ஷா (Balendra Shah) பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அனைத்துலக அளவில் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார்.

நேப்பாளத்தில் சென்ற வாரம் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் சாதாரணமானதல்ல; அது பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டது என்பதை அவர் சுட்டினார்.

இமயமலைப் பகுதியில் மாபெரும் பனிப்பாறை வெடித்துச் சிதறியது. அதனால் பெருக்கடுத்த வெள்ளமும் சிதைவுகளும் நேப்பாள - திபெத்திய எல்லையில் பேரழிவை ஏற்படுத்தின.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 900ஐத் தாண்டிவிட்டது. சுமார் 4,500 பேரைக் காணவில்லை.

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைச் சீரமைக்கப் பல பில்லியன் டாலர் நிதி தேவை என்று நேப்பாளம் தெரிவித்தது.

உலகின் ஆக உயரமான மலைத்தொடர் இமயமலை. உலகின் வெப்பநிலை உயர்வதால் இமயமலையின் பனிப்பகுதி வேகமாக உருகுவதை விஞ்ஞானிகள் சுட்டுகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதியில் அபாயம் அதிகரிக்கிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று திரு ஷா கூறினார்.

நேப்பாளத்தின் மக்கள்தொகை 30 மில்லியன். அந்நாட்டின் பெரும்பகுதி கிராமங்களைக் கொண்டது.

உலக வெப்பம் அதிகரிக்கக் காரணமாகும் கரிம வாயுவை வெளியேற்றுவதில் நேப்பாளத்தின் பங்கு மிகவும் குறைவு.

ஆனால் பருவநிலை மாற்றத்தால் அந்நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் விரைந்து செயல்படவேண்டிய நேரம் இது என்று திரு ஷா வலியுறுத்தினார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்