Skip to main content
இமயமலையில் பனிப்பாறைகளால் வெள்ள அபாயம்: ஐநா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இமயமலையில் பனிப்பாறைகளால் வெள்ள அபாயம்: ஐநா

வாசிப்புநேரம் -
இமயமலையில் பனிப்பாறைகளால் வெள்ள அபாயம்: ஐநா

(படம்: PRAKASH MATHEMA and PRAKASH MATHEMA / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Sep 2026 10:45AM புதுப்பிப்பு : 02 Sep 2026 11:29AM
இமயமலைப் பகுதி முழுவதும் பனிப்பாறைகளால் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (UN) எச்சரித்துள்ளது.

அங்குப் பெருவெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகும் வேளையில் மாண்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

நேப்பாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4,000 பேரை இன்னும் காணவில்லை.

அந்த வட்டாரத்தில் மில்லியன் கணக்கானோர் தொடர்ந்து அபாயத்தை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் துணைத் தலைமைச் செயலாளர் கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) கூறினார்.

கடந்த வாரம் ஏற்பட்ட பேரிடரை எந்த அளவிலான கட்டுமானத்தாலும் தடுத்திருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

சீனா, நேப்பாளம், இந்தியா, தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறப்பு உதவிக் குழுக்கள் தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல பாலங்கள் கட்டி உதவி வருகின்றன.

நேப்பாளத்தில் நீர்மின் சுரங்கங்களில் சிக்கியிருப்பதாக நம்பப்படும் சுமார் 100 ஊழியர்களைக் காப்பாற்றுவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்